யோகாவில் ராஜஸ்தான் கின்னஸ் சாதனை

ஜெய்ப்பூர்:

யோகாவில் ராஜஸ்தான் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. ராஜஸ்தான் நடந்த யோகா நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்.ஏ.சி மைதானத்தில் காலை 5 மணி முதல் யோகா நடந்தது. இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகாசனம், மூச்சுபயிற்சி செய்தனர்.

2017-ம் ஆண்டு மைசூரில் 55,524 பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர். தற்போது ராஜஸ்தானில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.