ராஜஸ்தானில் தலித் வாலிபர் அடித்து கொலை

--

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பார்மெர் மாவட்டத்தில் 22 வயது மதிக்கத்தக்க தலித் ஒருவர் கும்பலால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தாக்குதலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.