ராஜஸ்தான்: நடுரோட்டில் பிரேதப் பரிசோதனை நடந்த அவலம்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் நடுரோட்டில் பிரேத பரிசோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mortem

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் கதாரா பகுதியைச் சேர்ந்த மாயா கன்வார் தனது வீட்டின் மொட்டையில் மாடியில் துணிகளை உலர வைத்துக் கொண்டிருந்தார். அப்போது உலர வைத்த துணி எதிர்பாராத விதமாக மின்வயர் மீது பட்டுள்ளதால் மாயா கன்னார் மீது மின்சாரம் பாய்ந்தது. மாயா கருகிய படி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரைக் காப்பாற்ற வந்த மாயா கன்னாரின் மாமனார் பதாம் சிங் மற்றும் மாமியார் ராஜா தேவி ஆகியோர் மீதும் மின்சாரம் பாந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாயா கன்னார் மற்றும் ராஜ தேவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், பதாம் சிங் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து இறந்த மாயா மற்றும் அவரது மாமியார் ராஜாதேவி உடலை உறவினர்கள் கேட்டுக் கொண்டதால் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. காதரா சாலையில் உள்ள அந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு இல்லாததால் வெட்டவெளியில் பொது இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கவனிக்க கூடிய விஷயம் என்னவெனில் அரசு மருத்துவரே பிரேத பரிசோதனையை நடுரோட்டில் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டவெளியில் பிரேத பரிசோதனை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வருகிறது.