மும்பையைப் புரட்டி எடுத்த ராஜஸ்தான் – பெரிய இலக்கை அசால்ட்டாக எட்டி 8 விக்கெட்டுகளில் வெற்றி!

அபுதாபி: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில், 196 ரன்கள் என்ற பெரிய இலக்கை எளிதாக எட்டி வென்றுள்ளது ராஜஸ்தான் அணி.

முதலில் பேட்டிங் செய்த மும்ப‍ை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களைக் குவித்தது.

இதனையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், துவக்க வீரர் ராபின் உத்தப்பா 13 ரன்களை மட்டுமே அடித்தார். கேப்டன் ஸ்மித் 11 ரன்களுக்கு அவுட்டானார்.

அதேசமயம், வெற்றிக்கான பொறுப்பை பென் ஸ்டோக்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் கையில் எடுத்துக்கொண்டனர். பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் தொடரின் நான்காவது சதத்தை விளாசினார்.

மொத்தம் 60 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள் & 14 பவுண்டரிகளுடன் 107 ரன்களை வெளுத்தார். மறுமுனையில், 31 பந்துகளை சந்தித்த சஞ்சு சாம்ஸன் 3 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களை குவித்தார்.

கூடுதல் ரன்களாக 11 ரன்கள் கிடைக்க, 18.2 ஓவர்களிலேயே, வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பிரமாண்ட வெற்றியை ஈட்டியது ராஜஸ்தான் அணி.

மும்ப‍ை அணி சார்பில், டிரென்ட் பெளல்ட் மற்றும் ஜேம்ஸ் பேட்டிசன் ஆகிய இருவருமே, தலா 40 ரன்களை வழங்கினர்.