பஞ்சாபை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்தில், மத்திய வேளாண் மசோதாவுக்கு எதிரான மசோதா தாக்கல்…

ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,  அந்த சட்டங்களுக்கு எதிராக முதல்வர்  அசோக் கெலாட் தலைமையிலான மாநிலஅரசு   ராஜஸ்தான் சட்டமன்றத்தில்  புதிய திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் நிறைவேற்றப்படஉள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020,விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின்போது  நிறைவேறின.

இந்த  விவசாயச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன , இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்படுட வருகின்றன.

இதையடுத்து,  மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வகையில் புதிய மசோதாக்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று அந்தக் அக்ட்சியின் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டிந்தார்.

அதன் அடிப்படையில் மத்தியஅரசின் வேளாண்  மசோதாவை ரத்து செய்யும் வகையில்,  றைந்தபட்ச ஆதரவு விலையை புதிய சட்டத்தின் மூலம் மறுக்காமல் வழங்குவதற்கு   வரைவு நகல் ஒன்று காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்து. இந்த மசோதாவை சிறப்பு சட்டபேரவையை கூட்டி நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டது. அந்த மசோதாவுக்கு விவசாயிகள் உரிமை மற்றும் சிறப்பு பாதுகாப்பு மசோதா 2020 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா ஏற்கனவே பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் சத்திஸ்கர் மாநிலத்திலும் விரைவில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று புதிய மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. ராஜஸ்தானின் நாடாளுமன்ற விவகார அமைச்சர் சாந்தி தரிவால் சட்டமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் அவர் நடைமுறைச் சட்டம் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020 ஐ அறிமுகப்படுத்தினார்.

அத்தியாவசிய பொருட்கள் (சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் (ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி மற்றும் ராஜஸ்தான் திருத்தம்) மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் சமீபத்தில் இறந்த பிற தலைவர்களின் மரணம் குறித்த இரங்கல் குறிப்புகளுக்குப் பின்னர் சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.