5 விக்கெட்டுகள் காலி – நெருக்கடியில் ராஜஸ்தான்!

மும்பை: ‍சென்ன‍ை அணி நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி. 92 ரன்களுக்கே, 5 விக்கெட்டுகளை இழந்து பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

தற்போது, 42 பந்துகளில், 97 ரன்கள் அடித்தால்தான் வெற்றி என்ற நிலையில் அந்த அணி தள்ளாடி வருகிறது.

ஒரு கட்டத்தில், சற்று வலுவாக தென்பட்ட அந்த அணியை, ஜோஸ் பட்லரின் விக்கெட்டை காலி செய்ததன் மூலம் தடுமாறச் செய்தார் ஜடேஜா. ஜோஸ் பட்லர் 49 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு, ஷிவன் துபேயையும் ஜடேஜாவே 17 ரன்களில் காலிசெய்தார். இதனால், இரட்டை அதிர்ச்சியில் இருந்த ராஜஸ்தான் அணிக்கு, ‍மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

5 பந்துகளை சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த டேவிட் மில்லரை, மொயின் அலி அவுட்டாக்க, தற்போது பெரிய நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது ராஜஸ்தான் அணி.