கொரோனா தீவிரம்: மாநில எல்லைகளை மூடியது ராஜஸ்தான்…

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவில் தீவிரமாகி உள்ளதால், மாநில எல்லைகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கை 11,368-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 415 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,  அண்டை மாநிலங்கள் உடனான எல்லைகளை மூட ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாநில எல்லைகளை ஒருவாரம் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள், மாநிலத்தை விட்டு வெளியேற மக்கள் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.