ராஜஸ்தான்:
ராஜஸ்தான் சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு செய்யப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறைச்சாலை கையேட்டை முழுமையாக மாற்றுவதற்கான உத்தேச நடவடிக்கைகள் குறித்து விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் டிசம்பர் 17 ஆம் தேதி மாநில அரசிடம் சாதி மத அடிப்படையில் எந்த ஒரு கைதியும் சிறைச்சாலைகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற மோசமான வேலைகளில் ஈடுபட நிர்பந்திக்கப்படவில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
நீதிபதி தேவேந்திர கச்சவாஹா மற்றும் நீதிபதி சந்திப் மேத்தா ஆகியோரின் குழு இதைப்பற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது:
நமது நாட்டின் முற்போக்கான ஜனநாயகத்தை கருத்தில் கொண்டு சிறைகளில் சரியான சுகாதாரத்தை பராமரிப்பதை உறுதி செய்வதற்காக, ராஜஸ்தான் மாநிலத்தின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இயந்திரமாக்கப்பட்ட/ தானியங்கி துப்புரவு வசதிகளை அனைத்து ராஜஸ்தான் சிறைச்சாலைகளிலும் நிறுவுவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதைப் பற்றி நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது: சமீபத்தில் ராஜஸ்தான் சிறைகளில் சாதி அடிப்படையிலான வேலை ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து ஒரு இணையதளத்தில் வெளியிட்ட மிகவும் குழப்பமான ஒரு அறிக்கையை நாங்கள் கண்டோம், அதனை கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்! கைதிகள் சிறையில் நுழைந்தவுடன் அவருடைய சாதியை கேட்டு அதனடிப்படையில் அவர்களுக்கு கை கழுவுவது, கூட்டி பெருக்குவது போன்ற மோசமான வேலைகள் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் இதனை  மாநில அரசு சரியாக கண்காணித்து சாதி மத அடிப்படையில் சிறைக்கைதிகளுக்கு கழிப்பறை கழுவுவது போன்ற மோசமான வேலைகளை கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் சாதி மத அடிப்படையில் மட்டுமல்லாமல் எந்த ஒரு சிறைக்கைதிக்கும், இதுபோன்ற மோசமான வேலைகளை ஒதுக்கக் கூடாது என்பதையும் மாநில அரசு உறுதி செய்ய