ராஜஸ்தான்: மெக்சிகோ பெண்களிடம் சில்மிஷம்…ஓட்டல் மேலாளர் கைது

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மெக்சிகோவை சேர்ந்த 2 பெண்கள் சுற்றுலா வந்தனர். இருவரும் ஒரு 5 நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.

இரு தினங்களுக்கு முன்பு ஓட்டல் மேலாளர் ரிஷி ராஜ் சிங் (வயது 40) என்பவர் பெண்களின் அறைக்குச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.

இது குறித்து அப் பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆதாரமாக கொண்டு ரிஷிராஜ் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

You may have missed