ராஜஸ்தான்,

பசு பாதுகாப்புக்காக நீதித்துறை அல்லாத மற்ற துறைகளில் 10 சதவிகிதம் கூடுதல் முத்திரை கட்டணத்தை வசூலிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கடந்த 31ந்தேதி ராஜஸ்தான் மாநிலநிதித்துறையில இருந்து உத்தரவு வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் முத்திரைத்தாள் சட்டம் 1998ன் படி, அரசின் நிதித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது இருக்கும் நடைமுறையில்யின்படி பசு பாதுகாப்பு மற்றும் பல நோக்கங்களுக்காக  அனைத்து கருவிகளின் மீதான செலுத்தப்பட முத்திரை கட்டணத்தில் 10 சதவிகிதம் உயர்த்த முடிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ராஜஸ்தான் மாநில நிதிநிலை அறிக்கையில்,  மாநிலத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளர்ச்சி, பசு பாதுகாப்பு ஆகியவற்றின் தேவைக்காக கூடுதல் கட்டணம் தேவைப்படுவதாக முதல்வர்  வசுந்தரா ராஜே கூறியிருந்தார்.

எனினும், இந்த 10 சதவிகித முத்திரைத்தாள் கட்டணத்திலிருந்து நீதித்துறை, வருவாய்த்துறை, காப்பீட்டுத்துறைக்கு விலக்கு அளிக்கப்படுவதாகவும் கூறி உள்ளார்.

இந்த 10 சதவிகித முத்திரை கட்டண உயர்வு மூலம் கிடைக்கும் வருமானம் பசு பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போது அதுகுறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.