நினைத்தது போலவே நடக்கிறது – எளிய இலக்கை எட்டுவதில் மூச்சு திணறும் ராஜஸ்தான்!

மும்பை: டெல்லி அணி நிர்ணயித்த 148 ரன்கள் என்ற எளிய இலக்க‍ை நோக்கி ஆடிவரும் ராஜஸ்தான் அணி, 73 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. அதேசமயம் 13 ஓவர்கள் கடந்துவிட்டன.

அந்த அணியின் துவக்க வீரர் ஜோஸ் பட்லர் 7 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். மற்றொருவரான மனான் வோரா 11 பந்துகளில் 9 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 3 பந்துகள்ல 4 ரன்கள் எடுத்து அவுட்.

ஷிவம் துவே, 7 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடித்து காலியானார். ரியான் பராக் 5 பந்துகளில் அடித்தது 2 ரன்கள் மட்டுமே. தற்போது, அணியின் ஒரே நம்பிக்கையாக ஆடிவருபவர் டேவிட் மில்லர். அவர் 36 பந்துகளில் 46 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். அவருடன் ராகுல் டெவாஷியா இணைந்துள்ளார். இந்த இணை நல்ல இன்னிங்ஸ் ஆடாவிட்டால் தோல்வி உறுதிசெய்யப்பட்டுவிடும்.

ராஜஸ்தான் அணி, தற்போதைய நிலவரப்படி, 38 பந்துகளில் 68 ரன்களை எடுத்தாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.