தேவை 185 ரன்கள் – ஆனால் ராஜஸ்தானோ 13 ஓவர்களில் 89/5

ஷார்ஜா: வெற்றிபெற 185 ரன்கள் தேவை என்ற நிலையில், 13 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது ராஜஸ்தான் அணி.

வெற்றிபெற 42 பந்துகளில் 96 ரன்களை எடுக்க வேண்டுமென்ற நிலையில், கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன அந்த அணிக்கு.

இன்றும்கூட, ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டங்கள் வேலைக்கு ஆகவில்லை. பட்லர் 8 பந்துகளில் 13 ரன்களும், ஸ்மித் 17 பந்துகளில் 24 ரன்களும், சாம்சன் 9 பந்துகளில் 5 ரன்களும் எடுத்தனர்.

தற்போது, ராகுல் டெவாஷியா மற்றும் பின்வரிசை வீரர்கள் எதையாவது சாதிப்பார்களா? என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.