ராஜஸ்தான்:

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் வெட்டுக்கிளிகளைக் கொல்ல ட்ரோன்களைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் உள்ள சுமார் 50 மாவட்டங்களை பாதித்துள்ளது. இப்போது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை நோக்கி வரும் இந்த வெட்டுக்கிளிகள் மீது பூச்சி மருந்து கலந்த ராசாயனங்களை தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) உலகளாவிய கணிப்பின்படி, தற்போதைய பிரச்சினையில், கூடுதலாக, புதிய பகுதிகளிலிருந்து வெட்டுக்கிளி கூட்டம் ஜூன் 22 முதல் இந்திய எல்லைக்குள் நுழையலாம் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

சில வயதுவந்த குழுக்கள் மற்றும் திரள்கள் வசந்தகால இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளிலிருந்து நாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெட்டுக்கிளி எச்சரிக்கை அலுவலகத்தின் துணை சேகரிப்பாளர் கே.எல். குர்ஜார் தெரிவித்தார்.

22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள ராஜஸ்தானில் இருந்து வெட்டுக்கிளிகள், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ராவை அடைந்தன. உண்மையில், ராஜஸ்தானின் கிழக்கு மற்றும் மத்திய பிரதேசத்தின் தெற்கு பகுதி என இரண்டு திசைகளிலிருந்து வெட்டுக்கிளிகள் வந்து சேருகின்றன.

இதுகுறித்து உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த மாநிலங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 10 மாவட்டங்கள் கடந்த வாரத்தில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில், பாலைவன வெட்டுக்கிளிகளின் கூட்டம் முக்கியமாக இரண்டு பகுதிகளிலிருந்து நுழைந்தன – மால்வா பிராந்தியத்தில் நீமுச் மற்றும் குவாலியர்-சம்பல் பிராந்தியத்தில் ஷியோபூர் – இரண்டும் ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளாகும்.

பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் இருந்து வந்த ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து ராஜஸ்தான் வெட்டுக்கிளி தாக்குதலுக்கு உள்ளாகின. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஜெய்ப்பூரில் இரண்டு வெட்டுக்கிளி கூட்டங்கள் வந்தடைந்தன. ஒன்று சமோடிலும், இரண்டாவது லங்காரியாவாஸ் கிராம பஞ்சாயத்திலும் இந்த வெட்டுக்கிளி கூட்டத்தின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் விவசாயத் துறையின் துணை இயக்குநர் பி.ஆர். கட்வா தெரிவிக்கையில், இரண்டு இடங்களிலும் வெட்டுக்கிளிகளை கொல்ல பெரியளவிலான கட்டுபாட்டு நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கையின் மூல்ம் 70 சதவிகித வெட்டுக்கிளிகளை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

ஜெய்ப்பூருக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவில் உள்ள சமோடில் வெட்டுக்கிளிகளைக் கொல்ல மாநில அரசு ட்ரோன்களைப் பயன்படுத்தியது. வெட்டுக்கிளிகளைக் கொல்ல 30 ட்ரோன்களை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக வேளாண் ஆணையர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.

பூச்சிகளைக் கொல்ல விவசாய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் வெட்டுக்கிளியின் பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு கூடுதல் ட்ரோன்களை மையம் வழங்கும் என்றும் குர்ஜார் கூறினார்.

இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஸ்ரீங்கநகரில் உள்ள இந்துமல்கோட்டிலிருந்தும் ஜெய்சால்மேரில் பாப்லாவிலிருந்தும் வெட்டுக்கிளிகள் ராஜஸ்தானுக்குள் நுழைந்தன.

மகாராஷ்டிராவில், வெட்டுக்கிளியின் தாக்கத்தை மத்திய மாவட்டத்திற்கு மிக அருகில் உள்ள வர்தா, அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களில் மூன்று மாவட்டங்களில் காணலாம். வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு கடந்த திங்கள்கிழமை காலை தொடங்கியது. இந்த வெட்டுக்கிளிகளால் ஆரஞ்சு பழத்தோட்டங்கள் அதிகம் பாதிக்கப்படுள்ளன.

இதுக்குறித்து நாக்பூர் பிரிவின் விவசாய இணை இயக்குநர் ரவீந்திர போசாலே கூறுகையில், தற்போது 25% இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற பூச்சிகளைப் போலன்றி, வெப்பநிலை அதிகரிப்பு வெட்டுக்கிளியைக் கொல்லாது என்றும் பாலைவன வெட்டுக்கிளிகளில் கோடைகாலத்தில் அதிக வெப்பநிலையின் தாக்கம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.