ராஜஸ்தானில் பயங்கர தீ விபத்து! மீட்பு பணி தீவிரம்

ராஜஸ்தான்: 

ராஜஸ்தானின் அல்வர் பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த் பகுதியில் உள்ள  தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர்  தீ விபத்து காரணமாக தீ பரவி வருகிறது. தீ விபத்து நடந்துள்ள அந்த தொழிற்சாலை, டயர் தொழிற்சாலை என்றும், அங்கு சுமார் 70,000 லிட்டர் எண்ணெய் தொழிற்சாலையில் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.

தீயை கட்டுப்படுத்த  24 தீயனைப்பு வீரர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.