ராஜஸ்தான் : இரு மனைவிகளை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவன்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இரு மனைவியரை உயிரோடு காரில் வைத்து எரித்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் தீபாராம் என்பவர் வசித்து வருகிறார்.   இவருக்கு தரியா தேவி (வயது 25) மற்றும் மாலி தேவி (வயது 27) என இருமனைவிகளும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.   இவர்  குடும்பத்தை விட்டு விட்டு குஜராத்தில் பணி புரிந்து வருகிறார்.    குடும்பத்தில் இவர்களுடன் இவர் தாயும் வசித்து வருகிறார்.

தீபாராமுக்கு தனது மனவியர் இருவரும் தன் தாயைக் சரியாக பார்த்துக் கொள்வதில்லை என்னும் வருத்தம் இருந்து வந்துள்ளது.   நேற்று தன் மனைவியர் இருவரையும் நகைக்கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.   ஓடும் காரில் தனது மனைவியருடன் சண்டையிட்டுக் கொண்டே சென்றுள்ளார்.   அதனால் சரிவர வாகனத்தை செலுத்த முடியாத தீபா ராம் வழியில் நிறுத்தி உள்ளார்.

அப்போது அவர் மனைவிகளில் ஒருவர் காரை விட்டு இறங்கி அக்கம் பக்கத்தாரிடம் சண்டை பற்றிக் கூற முயன்றுள்ளார்.   ஆனால் தீபாராம் அவரைப் பிடித்து உள்ளே தள்ளி ஊருக்கு வெளியே கொண்டு சென்றுள்ளார்.  இரு மனைவியரையும் காரின் உள்ளே வைத்து பூட்டிய பின் காரை  தீ வைத்துக் கொளுத்தி உள்ளார்.   இரு மனைவியரும் உடல் கருகி உள்ளேயே மரணம் அடைந்துள்ளனர்.

இதையொட்டி ராஜஸ்தான் மாநில காவல்துறை சூப்பிரண்ட் ஜலோர் பிஞ்சா ராம் அவரை கைது செய்து விசாரணை செய்துள்ளார்.   விசாரணையின் போது தனது குற்றத்தை தீபாராம் ஒப்புக் கொண்டுள்ளார்.    தீபாராம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.