ஜக்தீஷ் நாராயண் மீனா

ஜெய்ப்பூர்

ட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு சட்டப் பேரவையில் பியூன் வேலை கிடைத்தது ராஜஸ்தானில் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது.

சிறிய வேலைகளுக்கும் மிகவும் படித்த பலர் விண்ணப்பித்து வருவது தற்போது சகஜமாகி வருகிறது.   அதைப் போல் ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவையில் பியூன் உட்பட (குரூப் 4 எனப்படும் நான்காம் நிலை) பணியிடங்களுக்கு  129 பொறியியல் பட்டதாரிகள், 23 வழக்கரிஞர்கள், மற்றும் பல எம் பி ஏ பட்டதாரிகள்  என பலரும் விண்ணப்பித்திருந்தனர்.

அவ்வாறு விண்ணப்பித்திருந்தவர்களில் ஜாம்வா ராம்கார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகன் ஜக்தீஷ் நாராயண் மீனாவின் மகனான ராமகிருஷ்ண மீனாவும் ஒருவர்.   வெறும் பத்தாம் வகுப்பு படித்திருந்த இவருக்கு வயது 30.   அனைவரும் ஆச்சரியப் படும் வகையில் இவருக்கு இந்த பணி அளிக்கப்பட்டுள்ளது.    மொத்தம் உள்ள 18 காலியிடங்களுக்கு பட்டதாரிகள் உட்பட 12453 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் 10 ஆவது படித்த மகனுக்கு 12ஆவது இடம் கிடைத்துள்ளது.

இந்த பணி நியமனம் ராஜஸ்தான்  மாநிலத்தில் கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.   அதிகம் படித்தவர்களை பின்னுக்கு தள்ளி பத்தாம் வகுப்பு படித்தவருக்கு பணி அளித்ததை பலரும் விமர்சித்துள்ளனர்.    இது குறித்து ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் முறைகேடு நடந்துல்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.   மேலும் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜக்தீஷ், “என் மகனும் மற்றவர்கள் போலவே விண்ணப்பம் செய்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   நான் எனது பதவியை பயன் படுத்தி அவருக்கு பணி வாங்கிக் கொடுத்ததாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.   நான் அப்படி செய்திருந்தால் பியூன் வேலை எதற்கு வாங்கித் தரப்போகிறேன்.   ஏதாவது உயர் பதவியை வாங்கிக் கொடுத்திருக்க மாட்டேனா? எனக் கேட்டுள்ளார்.