ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் பத்திரிகா என்னும் செய்தித்தாள் இனி ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே பற்றிய செய்திகளை வெளியிட மாட்டோம் என அறிவித்துள்ளது.

கடந்த மாதம் கறுப்புச் சட்டம் என அழைக்கப்படும் ஒரு சட்டத்தை ஊடகங்களுக்கு எதிராக ராஜஸ்தானை ஆளும் பா ஜ க முதல்வர் வசுந்தர ராஜேவால் கொண்டு வரப்பட்டது.   அதன்படி  எந்த ஒரு அரசு ஊழியரோ அல்லது அதிகாரிகளோ சம்பந்தப்பட்ட வழக்கு விவரங்களை ஊடகங்கள் தீர்ப்பு வரும் வரை வெளியிடக்கூடாது என்றும் வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதற்கு அனைத்து எதிர்க்கட்சியினரும்,  அனைத்து ஊடகங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.    காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜிவ் காந்தி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல தலைவர்கள் தங்கள் எதிர்ப்பை ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இதையொட்டி அந்த மாநிலத்தின் புகழ் பெற்ற செய்தித்தாள்களில் ஒன்றான ராஜஸ்தான் பத்திரிகா, “இந்தக் கறுப்புச் சட்டத்தை உடனைடியாக முதல்வர் வசுந்தர ராஜே திரும்பப் பெற வேண்டும்.  அவர் திரும்பிப் பெறாத வரையில் ராஜஸ்தான் பத்திரிகா அவரைப் பற்றிய எந்தச் செய்தியையும் வெளியிடாது” என அறிவித்துள்ளது.