ராஜஸ்தான் போலீஸ் அத்துமீறல் : நிருபருக்கு மிரட்டல்

னுமான்கர், ராஜஸ்தான்

ஜ்ரங்க் தள் நடத்திய ஒரு பயிற்சிசாலைக்கு செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை ராஜஸ்தான் போலீஸ்  காவல் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மிரட்டியுள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள அனுமன்கர் என்னும் இடத்தில் பஜ்ரங்க் தள் பயிற்சிசாலை ஒன்றை நடத்தியது.

இதைப் பற்றி செய்தி சேகரிக்க, ஆஸாத் அஷ்ரஃப் என்னும் நிருபர் தன் சகாக்களான அனுபம் பாண்டே, விஜய் பாண்டே ஆகியோருடன் சென்றுள்ளார்.

அங்கு அவர் உள்ளூர் பஜ்ரங் தள் பிரமுகர்களுடன் தன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

தன்னை அவர்களிடம் அனுபம் குமார் என்னும் பொய்ப் பெயரில் அறிமுகம் செய்துக் கொண்டிருக்கிறார்.

அவர்களும் இவரை உள்ளூர் ஓட்டல் ஒன்றில் தங்கள் செலவில் தங்க வைத்து பயிற்சி நடத்தும் இடங்களுக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.

அங்கு அஷ்ரஃப் பலருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுப்பதைக் கண்டு அதைப் பற்றி கேட்டுள்ளார்.

அவர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போர் செய்வதால் அதை எதிர்க்க இந்தப் பயிற்சி என தெரிவித்துள்ளனர்

அஷ்ரஃப் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவர்களும் இவரை நம்பி தங்களின் அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள்.

அப்போது அங்கு வந்த உள்ளூர் பத்திரிகையாளர் பல்ஜீத் என்பவர் இவரைக் கண்டதும் அங்குள்ள தொண்டர்களை அழைத்துச் சென்று தன் மொபைல் ஃபோனில் ஏதோ செய்தியக் காட்டி உள்ளார்.

அதைக் கண்டதும் அச்சமுற்ற அஷ்ரஃப் சகாக்களுடன் அங்கிருந்து தப்ப முயற்சி செய்துள்ளார்.

ஆனால் அவர்களால் தப்ப முடியவில்லை.

அவர்களுடைய அடையாள அட்டையை காட்டுமாறு தொண்டர்கள் கேட்டுள்ளனர்.

அடையாள அட்டைகளை காட்ட மறுத்ததால் உள்ளூர் போலிசுக்கு தகவல் அனுப்பி, அவர்கள் இம்மூவரையும் தனித்தனி வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்..

அஷ்ரஃப் தான் யார் என்பதை போலிசிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அங்கிருந்த போலீஸ் அவரை கடுமையாக மிரட்டியுள்ளது.

ஒரு போலீஸ் அதிகாரி இது போல் பொய்த்தகவல் தரும் நிருபர்கள் அனைவருக்கும் பாடம் புகட்டுவோம் என கூறினாராம்.

அவர் தனது டில்லி நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளார்,

அவர்கள் வேறு சிலர் மூலம் முயற்சி செய்து பின் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்

அஷ்ரஃப் முன்பு அர்னாப் கோஸ்வாமி நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டபோது கோஸ்வாமி அவரை ”ஐஎஸ்ஐஎஸ் ஆதராவாளர்”,” முஜாஹிதீன் ஆதரவாளர்” என்றெல்லாம் விமர்சித்து உள்ளது குறிப்பிடத்தக்கது