மிரட்டிவரும் ராஜஸ்தானை சமாளிக்குமா கொல்கத்தா? – இன்று மோதல்!

அபுதாபி: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த தொடரில், இதுவரை தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும், 200 ரன்களுக்கு மேல் குவித்து மிரட்டியது ராஜஸ்தான் அணி. மேலும், பஞ்சாப் அணி நிர்ணயம் செய்த அதிகபட்ச இலக்கையும் அசராமல் சேஸ் செய்து, ஐபிஎல் தொடரில் அதிபட்ச சேஸிங் என்ற சாதனையையும் படைத்துள்ளது ராஜஸ்தான் அணி.

அந்த அணியின் கேப்டன் ஸ்மித், சஞ்சு சாம்ஸன் மற்றும் ராகுல் டிவாட்டியா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.

ராஜஸ்தான் அணி, தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ள நிலையில், கொல்கத்தா அணியோ, முதல் போட்டியில் மும்பையிடம் தோற்றும், இரண்டாவது போட்டியில் ஐதராபாத்தை வென்றும் உள்ளது.

இன்றைய போட்டியில், அசுர பலத்தில் உள்ள ராஜஸ்தானை, பெரிய எழுச்சிபெற்று கொல்கத்தா அணி வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.