மும்பை: பெங்களூரு அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில், 9 விக்க‍ெட்டுகளை இழந்து 177 ரன்களை அடித்துள்ளது.

அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், வோரா ஏமாற்றிய நிலையில், கேப்டன் சஞ்சுவும் 21 ரன்களையே எடுத்தார். டேவிட் மில்லர் டக்அவுட். ஷிவம் துவே, 32 பந்துகளில் 46 ரன்களையும், ரியான் பராக் 16 பந்துகளில் 25 ரன்களையும், ராகுல் டெவாஷியா 23 பந்துகளில் 40 ரன்களையும் அடிக்க, அணியின் ஸ்கோர், கெளரவமான நிலைக்கு உயர்ந்தது.

கிறிஸ் மோரிஸ் 10 ரன்கள் மட்டுமே அடித்தார். பெங்களூரு அணி சார்பில், முகமது சிராஸ் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

எட்டக்கூடிய இந்த இலக்கை விரட்டிப் பிடித்து பெங்களூரு அணி வென்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.