ராஜஸ்தான், தெலுங்கானா வாக்குப்பதிவு: மதியம் 1மணி வரை 40+% வாக்குப்பதிவு

ராஜஸ்தான், தெலுங்கானா  சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு தற்போது மந்தமான நிலையி லேயே தொடர்ந்து வருகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் 40% அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் விறுவிறுப்பாக வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவிட்ட நிலையில், நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு மந்தமானது.

காலை  காலை 9 மணி நிலவரப்படி ராஜஸ்தானில்  6.11 சதவிகிதம் வாக்குப்பதிவும், தெலுங்கானா வில் 8.97% சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது.

9.30 மணி நிலவரப்படி தெலங்கானாவில் – 10.15%, ராஜஸ்தானில் – 6.11% வாக்குகளும் பதிவாகின. பின்னர்  காலை 11 மணி நிலவரப்படி தெலங்கானாவில் – 23.40% வாக்குகள் பதிவு நடைபெற்றிருந்தது.

இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் இரண்டு மாநிலங்களிலும் தலா 40 சதவிகிதம் அளவுக்கே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 41.53 சதவிகித வாக்குகளும்,தெலுங்கான மாநிலத்தில்  48.1 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன. 

சானியா மிர்சா வாக்களித்துவிட்டு வரும் காட்சி

வாக்குப்பதிவு தொடங்கி 5 மணி நேரம் ஆன நிலையில் மிகக்குறைவான அளவிலேயே வாக்குகள் பதிவாகி உள்ளன.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில்,5 மாநில சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்டமாக, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்த  5 மாநிலங்களிலும்  வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி  நடைபெறுகிறது.