ஜெய்ப்பூர்: நில விவகாரம் தொடர்ப்க, ராஜஸ்தான் மாநிலத்தில், கோவில் பூசாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானின் கரோலி மாவட்டத்தில் உள்ளது புக்னா கிராமம். அங்குள்ள ராதா கிருஷ்ணன் கோவிலில் பூசாரியாக இருந்து வருபவர் பாபு லால் வைஷ்னவ் ( வயது 55). இவர் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்தும், அங்கே உள்ள சிறிய விட்டிலும் வசித்து வருகிறார். சமீபத்தில் அந்த இடத்தில் தினை பயிரிட்டதுடன், ஒரு பகுதியில் வீடு கட்டுவதற்கான பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இதையறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த உயர்ஜாதி வகுப்பினர் சிலர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமான என கூறி தகராறு செய்துள்ளனர். ஆனால், பூசாரி ஆதரவாக அந்த பகுதி மக்கள் இருந்துள்ளனர். இந்த விவகாரம் ஊர் பெரியவர்களிடம் செல்லவே அவர்களும் பூசாரிக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.
இந்நிலையில் பூசாரியின் இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய  இடத்தில் பிரச்சினை செய்த உயர்ஜாதியினர்,  குடிசை ஒன்றை எழுப்பியதுடன்,  தினை விளைவிக்கப்பட்ட இடத்தில் பெட்ரோலால் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இதையறிந்து அங்கு பதறிடியத்து ஓடிவந்த ந்த பூசாரி மீதும் ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி  தீ வைத்துள்ளனர்.
பலத்த  தீக்காயங்களுடன் அலறிய பூசாரியின் சத்தத்தைக் கேட்டு, அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால்,  பூசாரி பாபு லால் வைஷ்னவ் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த பூசாரியின் உடலை அவரது குடும்பத்தினரும், கிராமத்தினரும் மறுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பூசாரி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கைல்சா மீனா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்து உங்ளளனர்.
இந்த விவகாரம் ராஜஸ்தானில்  அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் உ.பி. ஹத்ராஸ் சம்பவத்தை காங்கிரசார் பெரிதுபடுத்திய நிலையில், தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை இந்த பிரச்சினையை கையிலெடுத்துள்ளன.