ஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

பெங்களூரு:

ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணியை 19 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் குவித்தது. சாம்சன் 10 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 45 பந்தில் 92 ரன்கள் குவித்தார். பெங்களூரு தரப்பில் சாஹல், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்து விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தது. கோஹ்லி 57 ரன், மன்தீப் சிங் 47 ரன் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயாஸ் கோபால் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.