துபாய்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ராபின் உத்தப்பா துவக்க வீரராக களமிறங்கி, 22 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 19 பந்துகளில் 15 ரன்களே அடித்தார்.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 36 பந்துகளில் 57 ரன்களை அடிக்க, பட்லர் 25 பந்துகளில் 24 ரன்களை மட்டுமே அடித்தார். ராகுல் டெவாஷியா 11 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் 177 ரன்களை அடித்து, பெங்களூரு அணிக்கு சற்று கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.