க்னோ

ணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் மரணம் அடைந்தோருக்கு ரூ.25 லட்சம் உதவித்தொகை அளிக்க வேண்டும் என ராஜ் பப்பர் கூறி உள்ளார்

பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையின் போது நோட்டுக்களை மாற்ற பலரும் கியூவில் நின்று அவதிப்பட்டனர்.   அவர்களில் சிலர் மரணம் அடைந்ததாகவும் செய்திகள் வந்தன.   ஆனால் மத்திய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.   உ பி மாநில காங்கிரஸ் தலைவரும், பிரபல இந்தி நடிகருமான ராஜ் பப்பர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஒரு பத்திரிகை சந்திப்பில் அவர், “பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையின் மூலம் பலர் மரணமடைந்துள்ளனர்.  அவர்களுக்கு அரசு ரூ.25 லட்சம் உதவித்தொகை அளிப்பதுடன் அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.  வரும் நவம்பர் 8 ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்.   தெருமுனைக் கூட்டங்களும், மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலமும் நடத்தப்பட உள்ளது.

மோடியின் அரசு பொதுமக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.  இந்த பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையால் பலருக்கும் துயரம் உண்டாகும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்தும் இந்த அரசு அதை லட்சியம் செய்யவில்லை   பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கையால் 50 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்படும் எனவும் இல்லையெனில் தனக்கு தண்டனை அளிக்கலாம் எனவும் மோடி கூறினார்.  ஆனால் 50 நாட்கள் என்னும் கெடு எப்போதோ முடிந்து விட்ட்து.  ஆனால் அவருக்குத் தான் எந்த தண்டனையும் கொடுக்கப்படவில்லை” என தெரிவித்தார்.