அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள்! ஸ்டாலின்

--

சென்னை:

மைச்சர் திண்டுக்கல் சீனாவாசனை போலவே ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

முதுமலை சரணாலயத்தில், பழங்குடியின சிறுவனை அழைத்து தனது செருப்பைக் கழற்றச் சொன்ன வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது  நடவடிக்கை எடுக்கவேண்டும்  அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பழங்குடியின சிறுவனை அவமதித்து சாதிய வெறியில் தன்னுடைய காலணியை கழற்றச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடனடியாக பதவி விலகவேண்டும் என்று மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல் சீனிவாசன் போன்றே அமைச்சர்கள்  ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்பட பல அமைச்சர்கள்  செயல்பட்ட வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

அமைச்சர்கள் பதவி ஏற்கும்போது,   தங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு மாறாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.