சென்னை

ராஜேந்திர பாலாஜி கட்சி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது குறித்து அவர் ஆதரவாளர்கள் கருத்து

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.

பால்வளத்துறை அமைச்சர் பொறுப்புடன் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பதவியிலும் இருந்து வந்தார், ராஜேந்திர பாலாஜி.

நேற்று செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

கட்சிக்காரர்களைச் சமமாக நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது நீண்டகாலமாகவே உண்டு.

பாலாஜியின் ஒரு கருத்து குறிப்பிட்ட மதத்தினரைக் காயப்படுத்தியுள்ளதாக உளவுத்துறை முதல் –அமைச்சருக்கு நோட் அனுப்பி இருந்ததாகக் கூறப்படுகிறது.

புலனாய்வு இதழ் நிருபர் தாக்கப்பட்ட விவகாரத்திலும் அவர் தலை உருண்டது.

இதனால் அவர் நீக்கப்பட்டதாக எதிர்கோஷ்யினர் விளக்கம் கொடுக்க-

அமைச்சர் ஆதரவாளர்களோ அதனை மறுக்கிறார்கள்.

‘’ அமைச்சருக்கு உடல் நலம் சரி இல்லை.அமைச்சர் பதவியோடு, கட்சி பணியையும் பார்ப்பது அவருக்குச் சுமையாக இருந்தது. கட்சி பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவரே கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார்’’ என்று புதுக்கதை சொல்கிறார்கள்.

புதிய செயலாளர் யார்?

முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன்,சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகங்காதரன் ஆகிய 3 பேர் பெயர் அடிபடுகிறது.

– ஏழுமலை வெங்கடேசன்