ஆர் கே நகர் இடைத் தேர்தல் : தமிழ்நாடு தேர்தல் அதிகாரி டில்லி சென்றார்

டில்லி

மிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி சென்றுள்ளார்

அ தி மு க பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தையொட்டி அவருடைய ஆர் கே நகர் தொகுதி காலியாக உள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலில், தினகரன், மதுசூதனன், தீபா ஜெயக்குமார் ஆகியோர் அ தி மு க வின் மூன்று அணிகளில் இருந்து போட்டியிட்டனர்.   பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை ஒட்டி அந்த தேர்தல் நடக்கும் முன்பே ரத்து செய்யப்பட்டது.

அதன் பின் வெகுநாட்களாக தேர்தல் நடத்துவது பற்றி ஏதும் செய்தி வராத நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆர் கே நகர் தொகுதி இடைத்தேர்தலை வரும் டிசம்பர் மாதாம் 31ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தது.   அதையொட்டி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி சென்றுள்ளார்.  அங்கு அவர் ஆர் கே நகர் இடைத்தேர்தல் நடைபெறும் தேதி குறித்து ஆலோசித்ததாக செய்திகள் வந்துள்ளன.  விரைவில் ஆர் கே நகர் இடைத்தேர்தலின் தேதிகள் அறிவிப்பு பற்றி அதிகார பூர்வ செய்திகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed