சென்னை

சை அமைப்பாளர் இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் கலந்துக் கொள்கின்றனர்.

வரும் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர். இந்த விழா சென்னை நந்தனத்தில் உள்ள் ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த விழாக்குழுவினர் தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரையும் நேரில் சென்று அழைத்து வருகின்றனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள் அறிக்கையில், “இளையராஜா பாராட்டு விழாவுக்கு ரஜினிகாந்த் வர வேண்டும் என விரும்பினோம். அதை ஒட்டி சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் துரைராஜ், பொருளாளர் பிரபு, நடிகர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் ரஜ்னியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

ரஜினிகாந்த் நிச்சயம் வருவதாக உறுதி அளித்துள்ளார். அத்துடன் நடிகர் கமலஹாசனை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். அவரும் நிச்சயம் வருவதாக உறுதி அளித்துள்ளார். எனவே இந்த விழாவில் அவர்கள் இருவரும் கலந்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.