40 ஆண்டுகள் கழித்து லோகேஷ் இயக்கத்தில் சேர்ந்து நடிக்கும் ரஜினி, கமல்…?

40 ஆண்டுகள் கழித்து ரஜினியும், கமலும் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார்களாம்.

லோகேஷ் அண்மையில் ரஜினியை அவரின் போயஸ் கார்டன் இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.

ரஜினியும், கமலும் சேர்ந்து அரசியல் பண்ணுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்கள் சேர்ந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். இந்த படத்தை கமல் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப் போகிறாராம்.