Random image

‘தர்பார்’ படத்தின் பாடல்களுக்காக அனிருத்தை பாராட்டிய ரஜினி….!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.இந்தப் படத்தின் ‘சும்மாகிழி’ என்ற பாடல் நவம்பர் 27-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னிலையில் அனிருத்தின் ஸ்டுடியோவுக்குச் சென்ற ரஜினி, ‘தர்பார்’ பாடல்கள் அனைத்தையும் கேட்டு அனிருத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அப்போது ஏ.ஆர்.முருகதாஸும் உடன் இருந்துள்ளார்.