ரஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமை : இயககுநர் கார்த்திக் சுப்புராஜ்

ஜினியை இயக்கியது ஆஸ்கரை விட பெருமையானது என்று இயககுநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வௌியீட்டு விழா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாய் நடைபெற்றது.  விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது : “இது கனவா நிஜயமா என்று என்னால் நம்ப முடியவில்லை. சிறு வயதிலிருந்து என் வாழ்வில் ஒரு  ரஜினி அங்கம். சினிமா மீது எனக்கு ஆசை வர காரணமே அவர் தான்.

மதுரையில் சினிமா தான் பொழுதுபோக்கு. அங்கு ரஜினியின்  படங்களை பார்தது பார்த்துத்தான் சினிமாவிற்கு வந்தேன். அவர் நமது படத்தை பார்த்து பாராட்டுவாரா என  ஏங்கினேன்.  பீட்சா படத்தை ரஜினி மனதார பாராட்டினார். ஆனால்  அவருடன் படம் பண்ணுவேன் என நினைத்துப்பார்க்கவில்லை.

ஜிகர்தண்டா படத்தை பார்த்துவிட்டு பரட்டை படம் நினைவுக்கு வந்ததாக ரஜினி கூறினார். வரிடம், நான் உங்களை மனதில் வைத்து தான் ஒவ்வொரு படத்தின் கேரக்டரையும் உருவாக்குவேன் என்று கூறினேன்.  அப்படியென்றால் எனக்கே சொல்லலாமே என்றார்.

அதன்பிறகு மற்றொரு நாளில் எனக்கு கதை இருக்குமா என கேட்டார், அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. பேட்ட படம் முழுக்க ரஜினிக்கான படம்.  ஒருவேளை நான் ஆஸ்கர் விருதே பெற்றிருந்தாலும்  ரஜினி படத்தை இயக்காமல் போய் இருந்தால், இயக்குநராக என் திரை வாழ்க்கை முழுமையாக பூர்த்தியாகி இருக்காது. அதைவிட இது பெருமையானது” என்று கார்த்திக் சுப்புராஜ்பேசினார்.