ருமகன் நடிகர் தனுஷ் தயாரிப்பில் மாமனார் ரஜினி நடித்துள்ள காலா படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது. மேலும், காலாபடத்தின் டுவிட்டர் எமோஜி ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அண்டை மாநிலங்களுக்கு ரஜினி செல்லவிருந்த திட்டத்தை தூத்துக்குடி துப்பாக்கி சூடு காரணமாக ரத்து செய்திருப்பதாக ரஜினி அறிவித்து உள்ளார்.

அடுத்த மாதம் 7ந்தேதி படம் வெளியாகி உள்ள நிலையில், காலா திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத், கர்நாடகா  மற்றும் மும்பை செல்லவிருந்தார்.

இந்த நிலையில் காலா படம் திரையுட கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு மக்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காலா திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக ஐதராபாத் மற்றும் மும்பை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தனது திட்டத்தை ரத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி சம்பவத்தால் திட்டத்தை ரத்து செய்வதாக ரஜினி அறிவித்துள்ளார்.