அரசியலுக்கு வருவது ரஜினி உடல்நலன், குடும்ப நலனுக்கு நல்லதல்ல!: அமைச்சர் ஓ.எஸ். மணியன்

சென்னை,

டிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அவருடைய மனம் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் அவருடைய உடல்நிலை ஏற்றுக்கொள்ளாது என்று  கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  கூறியிருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ரஜினியின் அரசியல் வருகை குறித்து  தெரிவித்ததாவது:

“ ரஜினி அரசியல் களத்திற்கு வந்தால்,  அதை அவருடைய உடல் ஏற்றுக்கொள்ளாது.  அவருடைய மனம் வேறாக இருக்கலாம், எண்ணங்கள் வேறாக இருக்கலாம் ஆனால் உடல் ஏற்றுக் கொள்ளாது. அரசியல் பிரவேசம் வருவது என்பது அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்வதே நல்லது.

அதே போல  அவருடைய குடும்பத்திற்கும் நல்லதல்ல” என்று அமைச்சர் தெரிவித்தார்.