ரஜினிகாந்த் பேரன்களுக்கே இத்தனை கோடியா….?

இந்திய சினிமாவில் ரூ.100 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார்.ஆம் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக ரூ.100 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்திற்கு வேத், யாத்ரா மற்றும் லிங்கா என்று மூன்று பேரன்கள் இருக்கிறார்கள்.இவர்களது பெயரில் தலா ரூ.25 கோடியை ரஜினிகாந்த் வங்கியில் டெபாசிட் செய்திருக்கிறாராம்.

பேரன்களுக்கு 25 வயது ஆன பிறகே, பணத்தை அவர்களால் எடுக்க முடியும், என்பதுபோலவும் அதன் பிறகு, 25 வயதாகும் போது, ஒவ்வொரு பெயரிலும் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் இந்த ரூ.25 கோடி ரூ.90 கோடியாக உயர்ந்திருக்குமாம். அதேபோல், 22 வயது அடையும் போது, வட்டி பணம் ரூ.50 லட்சம் இவர்களுக்கு சம்பளமாக கிடைக்கும்படியும் ரஜினிகாந்த் செய்திருக்கிறாராம்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் தனது பெண்கள் பெயரில் பல தொழில்களை செய்து வரும் ரஜினிகாந்த், இந்தியா முழுவதும் பல சொத்துக்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.