தனது சகலை (மனைவியின் சகோதரியின் கணவர்) ஒய்.ஜி.மகேந்திரனின் மேடை நிகழ்ச்சியை நேற்று நடிகர் ரஜினிகாந்த் மெய்மறந்து ரசித்தார். சென்னை வாணிமகாலில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை கிட்டதட்ட இரண்டு மணி நேரம் ரஜினி ரசித்தார்.

இத்தகவல் புகைப்படத்தோடு இன்று சமூகவலைதளங்களில் வெளியானது.

இதை சமூகவலைதளங்களில் பலரும் கண்டித்திருக்கிறார்கள்.

“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே மெத்தனமாக இருக்கிறது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கட்சிகள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக மக்களும், குறிப்பாக மாணவர்களும் போராடி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் புற்று நோய் வருவதாக சொல்கிறார்கள் என்று ஒரு அறிக்கையை மட்டும் விட்டுவிட்டு ரஜினி அமைதியாக இருந்துவிட்டார். அவரது கருத்து தவறு என ஸ்டெர்லைட் ஆலை கூறியதற்கும் பதில் அளிக்கவில்லை.

தனது சகலையின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை இரண்டு மணி நேரத்துக்கு மேல் ரசிக்கிறார்.

இதுதான் ஆன்மிக அரசியலா?

ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னர்தான் நினைவுக்கு வருகிறது” என்று நெட்டிசன்கள் பலரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.