ரஜினி ரசிகரை கொலையாளியாக்கிய  கொரோனா..

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த தினேஷ்பாபு, தீவிர ரஜினி ரசிகர்.
அவருக்கு எதிர் வீட்டில் வசித்து வந்தவர் யுவராஜ், இவர் நடிகர் விஜய்யின் அபிமானி.
கொரோனாவின் பாதிப்பு குறித்து இருவரும் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

கொரோனா ஊரை எல்லாம் முடங்க வைத்து விட்டதே என்று ஆதங்கப்பட்டுக்கொண்டனர்.
கொரோனாவுக்கு, தங்கள் ‘தலைவர்’கள் செய்த நிதி உதவி குறித்து பேச்சு திசை மாறியது.

‘’எங்கள் சூப்பர்ஸ்டார் தான் எல்லோருக்கும் முந்தி, முதல் ஆளாக கொரோனாவுக்கு நிதி கொடுத்தார்’’ என்று ரஜினி ரசிகர் தினேஷ்பாபு, மீசையை முறுக்கினார்.

‘எங்கள் இளையதளபதி தான் அதிக நிதி வழங்கினார்’’ என்று யுவராஜ், ‘சவுண்ட்’ விட்டார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.
கை கலப்பில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற தினேஷ், அருகே கிடந்த கல்லை எடுத்து வீச, அது யுவராஜ் கண்ணை பதம் பார்த்தது.
படுகாயம் அடைந்த , யுவராஜ் மருத்துமவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே இறந்து போனார்.
போலீசார் ரஜினி ரசிகர் தினேஷ்பாபுவை கைது செய்து, திண்டிவனம் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

You may have missed