சரத்குமார் உருவப்படங்கள் எரிப்பு!: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

--

“அரசியல் பற்றிப்பேச நடிகர் ரஜினிக்கு அருகதை இல்லை. அவர் அரசியலுக்கு வந்தால் தீவிரமாக எதிர்ப்பேன்” என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்திருந்தார்.

இதற்கு ரஜினி ரசிகர்கள், சமூகவலைதளங்களில் சரத்குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  இரவு எட்டு மணியளவில் வேலூர் மாவட்டம், சோளிங்கர் நகர பேருந்து நிலையத்தில் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் ரவி தலைமையில் ரஜினி ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் நடிகர் சரத்குமார் உருவபொம்மையை எரித்துதுடன், சரத்குமாருக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.