ரஜினி ரசிகர்களின் ‘தர்பார்’ கொண்டாட்டம்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகியுள்ள இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழக அரசு ஸ்பெஷல் காட்சிக்கு அனுமதியளித்ததால், தமிழகம் முழுக்க அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி தொடங்கப்பட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-