2.0 படம் வெற்றிபெற மண்சோறு சாப்பிட்ட ரசிகர்கள்!

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வெற்றிபெற வேண்டி, மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தினார்கள்.   

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 2.0 திரைப்படம் நாளை வெளியாகிறது.  இந்த திரைப்படத்தின் பாடல்கள், டீசர் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளது, இந்தியாவிலேயே அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டது,  3டி படம்.. என்று பல்வேறு விதங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், 2.o திரைப்படம் வெற்றிபெற வேண்டி, ரஜினிகாந்த் ரசிகர்கள்   திருப்பரங்குன்றம் வெயிலுகாத்த அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.. அதோடு,  மண்சோறு சாப்பிட்டும், அங்கபிரதட்சிணம் செய்தும் வழிபாடு நடத்தினார்கள்.