30 வருசமா ரஜினி இதைத்தான் சொல்றார்: போட்டு உடைத்த தமிழிசை காட்டம்

--

ன்னிடமிருந்து அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று இன்று ரஜினி குற்றம்சாட்டினார்.

அரசியல்வாதிகள் பலரும், ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி அழைத்தாலும், பா.ஜ.க. தலைவர்கள்தான்  இக் கோரிக்கையை அதிகமாக வைக்கின்றனர். பிரதமர் மோடி, ரஜினியின் வீடு தேடிப்போய் சந்தித்தார். அக் கட்சியைச் சேர்ந்த பிற தலைவர்கள் பலரும்கூட ரஜினியை அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தன்னிடமிருந்து அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று இன்று ரஜினி  குற்றம்சாட்டியுள்ளது, பாஜகவை குறிவைத்துத்தானோ என்ற  எண்ணம் பரவலாக ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது:

“ரஜினியின் பேச்சில்  குற்றச்சாட்டு என்று எடுத்துக்கொள்வதற்கு முன்னால் நேர்மறையாக சொல்ல வேண்டியது இருக்கிறது. இளைஞர்கள் குடி, மது கூடாது, ஊழலற்ற தன்மை இருக்க வேண்டும் என்றும் சொல்வது ஆரோக்யமானது.

ஊழலற்ற தலைமை உள்ள கட்சி என்கிற முறையில் ரஜினியின் இந்த பேச்சுக்கு மகிழ்கிறோம்.

அதே நேரம், அரசியல் ஆதாயத்துக்காகத்தான் அவரை எல்லோரும் அணுகினார்கள் என்று சொல்வதை ஏற்க முடியாது. .. மரியாதைக்குக்கூட சிலர் சில வார்த்தைகளைச் சொல்லியிருக்கலாம். அதை ஆதாயத்துக்காக கூறியதாக சொல்ல முடியாது.

அரசியலில் ஊழலற்ற தன்மை என்று ரஜினி பேசியிருக்கிறார். 1996ம் ஆண்டு திமு.க.வை ஆதரித்தார். அது. ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்ததா?

ரஜினி அரசியலுக்கு வரட்டும். அதே நேரம் கட்சி நடத்த கட்டமைப்பு அவசியம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

பாஜகவைப் பொறுத்தவரை ரஜினியை வைத்து மட்டுமே கட்சியை வளர்க்க நினைக்கிறோம் என்பது தவறு. இது 200 சதவிகிதம் பொய். நாங்கள் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவே திட்டமிட்டு செயல்படுகிறோம்.

கங்கை அமரன், ரஜினியை சந்தித்தித்து திரும்பியபோது, அரசியலுக்கு வருவார் என்றார். அப்போது ரஜினி அதை மறுத்தார். அது எங்களுக்கு சங்கடமாகத்தான் இருந்தது.

ஆனால் கங்கை அமரன் மட்டும் அப்படிச் சொல்லவில்லை. பலர்  அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஏன்..  ரஜினியே அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆமாம்… ரஜினிஅரசியலுக்கு வருவேன் என்பது 30 வருடங்களாக இருக்கும் வார்த்தைகள்தான்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.