இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பலரும் கடும் அவதிக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குநர்கள் சங்கத்துக்கு ரஜினி பொருளுதவி செய்திருக்கிறார். 1500 பேருக்கு உதவும் வகையில் 10 கிலோ எடை கொண்ட அரசி மூட்டைகள் மற்றும் 6 கிலோ எடை கொண்ட மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். சினிமாத்துறை சார்ந்த சங்கங்களுக்கும் சுமார் 24 டன் எடை உள்ள அத்தியாவசிய பொருட்களை *கொரோனா நிவாரணமாக வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய பொருட்களை இயக்குநர் சங்க நிர்வாகிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்

இது தொடர்பாக ரஜினிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது இயக்குநர்கள் சங்கம் .

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார். அப்போது ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி ஆகியவற்றுக்கு ரஜினி நிதியுதவி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.