மதுரை,

டிகர் ரஜினி ஒரு வியாபாரி…  அவர் இன்று ஒன்ற பேசுவார்….  நாளைக்கு ஒன்று பேசுவார் என்று அதிரடியாக கூறியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.

இன்று மதுரை வந்திருந்த தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு ரஜினி குறித்து அதிரடி கருத்துக்களை கூறி உள்ளார்.

கடந்த சில நாட்களாக ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வந்தார். அப்போது அவரது பேச்சு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்களுடன் பேசும்போது,  ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன்’ என்றும்,  ‘நாட்டில் சிஸ்டம் கெட்டு போய் இருக்கிறது. போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று அதிரடியாக பேசி அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்துவிட்டார்.

ரஜினியின் பேச்சு அரசியல் கட்சியினன் விவாதத்துக்கு தொடக்கமாகி உள்ளது.  ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உலா வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது,

நீர் நிலைகளை தி.மு.க தூர்வாருவது ஒரு நாடகம்  என்றும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கியவர்கள் கதி என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார்.

ஏற்கனவே, நடிகர்கள் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றே நடிகர்கள் கட்சிகளை ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், ரஜினி கூறியதை பற்றியெல்லாம் கவலைக்கொள்ளத் தேவை யில்லை. தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வியாபாரி; இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார்; நடிகர்கள் பின்னால் போவதை மக்கள் தவிர்த்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.