சென்னை:

லகத்தின் முதல் பகுதி நேர அரசியல்வாதி ரஜினி என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார்.

ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, தற்போது ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார்.

அங்கு, அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்ற அவர், அமிதாப் குணமடைய பிரார்த்திப்பதாக கூறினார்.

தமிழகத்தில் காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்து இரங்கல்கூட தெரிவிக்காத நிலையில், அமிதாப்புக்காக அவர் பிரார்த்திப்பதாக கூறிய தமிழக மக்களிடையே ரஜினிமீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  செய்தியாளர் ஒருவரின் ரஜினியின் நேற்றை பேட்டி குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர்,  உலகத்திலேயே முதன் முறையாக பகுதி நேர அரசியல்வாதி என்ற விஷயத்தை ரஜினி அறிமுகம் செய்துள்ளார் என்றார்.  இதற்கு முன்பு அப்படி யாருமே இருந்தது கிடையாது என்ற அவர், நாம் எல்லோரும் அரசியல்வாதி என்ற பதத்தை கேள்விப்பட்டுள்ளோம். அது அரசியல் அதிகாரம், அரசாட்சி செய்வது என்பதாக இருந்துள்ளது. ஆனால் இது வித்தியாசமாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும், போகப் போக நான் அரசியலில் ‘கேஷூவல் லேபர்’ ஆக இருக்கிறேன் என்று ரஜினி கூறுவார் போல… என்றும் கிண்டலடித்தார்.