ரஜினிதான் அடுத்த முதல்வர்: கமலஹாசனின் அண்ணன் சூசக தகவல்

சென்னை:

மிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக குறிப்பிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசனின் சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான நடிகர் கமலஹாசனின் சகோதரர் நடிகர் சாருஹாசன்.. இவர் தனது முகநூல் பக்கத்தில், கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் அடுத்த தமிழக முதல்வர் என்று பதிவிட்டுள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்தவர்தான் வருவார். இந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத வர்கள் என்னை முட்டாள் என்று அழைக்கலாம். உங்களை இந்த ஆண்டு நான் புரிந்து கொள்வேன். என்னை அடுத்த வருடம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”

இவ்வாறு சாருஹாசன் கூறியுள்ளார்.