இதான் சூப்பர் ஸ்டார்: அடுத்தவருட கடிதத்தை இன்றே வெளியிட்டார்!

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

bb

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஓய்வில்லாமல் கபாலி மற்றும் 2.0 ஆகிய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்ததால், உடலுக்கும்  மனதுக்கும் ஓய்வு தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தனது மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அமெரிக்கா சென்று  மருத்துவ பரிசோதனை செய்ததோடு  இரண்டு மாதங்கள் முழு ஓய்வும் எடுத்து கொண்டதாகவும், அதன் காரணமாக மிகுந்த உற்சாகத்துடன் தாய் மண்ணுக்கு  திரும்பிய தனக்கு கபாலி படத்தின் மிகப்பெரிய வெற்றி செய்தி மிகுந்த சந்தோஷத்தை அளித்திருப்பதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார். 

b

 

கபாலி படத்தை தயாரித்த  தாணுஇயக்குநர் ரஞ்சித்திரைப்பட குழுவினர் மற்றும் சக நடிகர் நடிகையர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள ரஜினி,  தனது அன்பு ரசிகர்களுக்கும்பொதுமக்களுக்கும் குறிப்பாக தாய்மார்களுக்கும்பத்திரிக்கை நண்பர்களுக்கும்தியேட்டர் உரிமையாளர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் தலைவணங்கி தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

a

 

ரசிகர்களுக்கு ரஜினி கடிதம் எழுதியது மட்டுமல்ல.., அக் கடிதத்தில் அடுத்தவருடத்தை குறிப்பிட்டிருக்கிறார் என்பதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

# கடிதத்தில் தேதியை கவனியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.