கமல் தயாரிப்பில் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதன் பின்னணி…!

கமல் தயாரிப்பில் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணையவுள்ளதன் பின்னணி குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது 50-வது படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்தது ராஜ்கமல் நிறுவனம். அதற்காகவே ரஜினியுடன் பேசி சம்மதம் வாங்கியுள்ளார் கமல் .

லோகேஷ் கனகராஜ் தீவிரமான கமல் ரசிகர். ‘கைதி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பின் போதே, கமலைச் சந்தித்து கதையைக் கூறச் சென்றுள்ளார்.

‘கைதி’ வெளியாகி மிகப்பெரிய ஹிட். ‘மாஸ்டர்’ படத்துக்காக டெல்லி படப்பிடிப்பில் இருக்கும்போது, லோகேஷ் கனகராஜை தொலைபேசி வாயிலாக பேசிப் பாராட்டியுள்ளார் ரஜினி. சென்னை வந்தவுடன் ரஜினியைச் சந்தித்து லோகேஷ் கனகராஜ்.

இந்த விஷயம் தொடர்பாக கமலிடம் சொல்லியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். உடனே கமலோ எனது 50-வது தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ளார். அந்தப் படத்தை நீங்களே இயக்குங்கள் என்ற சந்தோஷச் செய்தியைச் சொல்லியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரஜினி – லோகேஷ் கனகராஜ் சந்திப்பு மூன்று முறை நடந்துள்ளது. ஆகையால், ரஜினி – கமல் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.