ரஜினி, கமலுக்கு ஆந்திர அரசின் விருது அறிவிப்பு!!

ஐதராபாத்:

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவருக்கும் ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டுக்கான ஆந்திர அரசின் திரைப்பட சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திரைப்பட உலகிற்கு சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர்களுக்கு ஆந்திராவின் சூப்பர் ஸ்டாரும், மறைந்த முதல்வரான என்.டி.ராமராவ் பெயரில் ‘என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள்’ வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வரிசையில் 2016-ம் ஆண்டுக்கான என்.டி.ஆர் சிறப்பு தேசிய விருதுகள் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந் இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.