சென்னை,

மிழகத்தில் தற்போதுள்ள அரசியல் பரபரப்பில், நடைபெற இருக்கும் முரசொலி நாளிதழின் பவள விழாவில் தமிழகத்தின் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த்,கமலஹாசன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ. மறைவுக்கு பிறகு அதிமுக 2ஆக உடைந்தது. அதைத்தொடர்ந்து சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்து, தமிழக அரசியலில் பரபரப்புக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமலஹாசனும் சமீப காலமாக தனது டுவிட்டர் பதவில் தமிழக அரசியல் மற்றும் அரசு குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

கமலின் கருத்துக்கு தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில், முரசொலியின் பவள விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் பங்கேற்பர் என்று கூறப்படுகிறது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி நாளிதழ் தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதை விழாவாக கொண்டாட திமுக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அடுத்த (ஆகஸ்டு) மாதம்  8ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில், அதிமுகவை தவிர்த்து, அனைத்து கட்சிகளுக்கும், பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல  நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு நடிகர்கள், திரையிலகினர்களுக்கும்  திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், முரசொலியின் பவள விழாவில், நடிகர் கமலஹபாசன், ரஜினிகாந்த் பங்கேற்க அழைப்பு திமுக அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதும், இந்த நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருவதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.