ரஜினி ரிட்டர்ன்!

--

ருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக அமரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் “காலா” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினி, கடந்த ஜூன் 28ம் தேதி மும்பையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு தங்கியிருந்த ரஜினி சில மருத்தவ பரிசோதனைகள் செய்துகொண்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே அவர்,  அமெரிக்காவில் சூதாட்ட கிளப் ஒன்றில் இருக்கும் படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை  ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் செல்பி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் காரை ஒருவர் ஓட்ட ரஜினிகாந்த் பேசிக் கொண்டே செல்வது போல் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்ட ரஜினி நேற்று மாலை சென்னை திரும்பினார். இதையடுத்து காலா படத்தின் இரண்டாம்  கட்ட படப்பிடிப்பில்  அவர் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு அவரது அரசியல் சந்திப்புகள், அரசியல் யூகங்கள் குறித்த செய்திகளும் வெளியாகி வழக்கம்போல பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.